மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை ஆரம்பித்து முதலாவது வருடம் நிறைவடைந்து இரண்டாவது வருடத்தை ஆரம்பித்தது. முதலாவது வருடம் நிறைவடைந்தமைக்காகவும், கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை கெளரவிப்பதற்காகவும், மயிலிட்டி மாணவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் அனைவரும் ஒன்று கூடி கலந்துரையாடும் நாளாக தாயகத்தில் 19-04-2013 அன்று அகரம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை ஆரம்பித்ததிலிருந்து மாணவர்கள் படிப்பதற்கும் அகரம் நிகழ்வு சிறப்பாக நடை பெறுவதற்கும் மற்றும் அனைத்திற்கும் உதவி செய்த, செய்துகொண்டிருக்கின்ற உள்ளத்தால் பெரிய அனைவருக்கும் அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாகவும், மாணவர்கள் சார்பாகவும் நன்றிகள தெரிவிக்கின்றோம்.
அகரம் நிகழ்வு பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். உங்கள் கருத்துக்கள்தான் எனி வரும் காலங்களில் அகரம் நிகழ்வை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.
|